தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Facebook Comments