தனி தமிழீழம் உருவாக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட பூர்த்தி நேற்று நினைவுகூரப்பட்ட நிலையில், இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்தியாவிற்கு இடையில் கடந்த 1987ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசுவதை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது இலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வினை வழங்குவதோடு, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அது அமைய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments