வடக்கின்  நீலங்களின் சமர்  வெற்றிக்கிண்ணம்  கிளிநொச்சி  இந்துக்கல்லூரியின்  கையில்

 

 

கிளிநொச்சியின் துடுப்பாட்டத்தில் இரண்டு கல்லூரிகளுக்கு இடையே வருடந்தோறும் நடைபெறுகின்ற வடக்கின்  நீலங்களின் சமர் கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது  இன்று முடிவுக்கு  கொண்டு  வரப்பட்ட   நிலையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி  அணி   சமரின்  வெற்றிக்  கிண்ணத்தை  தனதாக்கிக்கொண்டது 

 

நேற்றய தினம் நாணய சுழற்சியில்  வெற்றி  ஈட்டிய  கிளிநொச்சி இந்துக் கல்லூரி  அணி  களத்தடுப்பை தீர்மானித்து  களமிறங்கியது  இரண்டு  நாட்களைக்   கொண்டு நடத்தப்பட்ட  டெஸ்ட்  கடினப்பந்து போட்டியில்  முதலில்  துடுப்பெடுத்தாடிய  கிளிநொச்சி  மத்திய கல்லூரி  35.வது  பந்து  பரிமாற்றத்தின்  நான்காவது பந்து வீச்சில்  அணி  அனைத்து விக்கற் களையும்  இழந்து 132  ஓட்டங்களை  பெற்றது

 

 அதனை  தொடர்ந்து  துடுப்பாட  களமிறங்கிய இந்துக்கல்லூரி அணியினர்  பதினாறாவது  பந்து பரிமாற்றத்தின்  மூன்றாவது பந்தில் மூன்று  விக்கற்  இழப்பிற்கு 71  ஓட்டங்களை  அணி  அடைந்த வேளை மழை குறுக்கிட்டமையால்  ஆட்டம் இடை நிறுத்தப்பட்டு இன்று  காலை  தொடர்ந்து  ஆரம்பிக்கப்பட்ட  போட்டியில்  இந்துக்கல்லூரி அணியினர்  மூன்று  விக்கற்  இழப்பிற்கு 51 வது  பந்துப்பரிமாற்ற நிறைவில்  206  ஓட்டங்களை  பெற்ற  வேளை  தமது  வெற்றிக்கு  ஓட்டங்கள்  போதும்  என  அணி தலைவரால்  தீர்மானிக்கப்பட்டு  துடுப்பாட்டம்  கிளிநொச்சி  மத்திய  கல்லூரி  அணிக்கு  வழங்கப்பட்டதை  அடுத்து  துடுப்பெடுத்தாடிய  கிளிநொச்சி  மத்திய  கல்லூரி  அணி  31 வது  பந்து  பரிமாற்றத்தின்  நான்காவது பந்து வீச்சில்  அணி  அனைத்து விக்கற் களையும்  இழந்து70 ஓட்டங்களுக்கு_MG_9197 _MG_9199 _MG_9446 _MG_9450 _MG_9464 _MG_9481 _MG_9500 _MG_9502 _MG_9514ள் மட்டுப்படுத்தப்பட  ஒரு  இனிங்ஸ்  மற்றும்  நான்கு  ஓட்டங்களால்  இந்துக்கல்லூரி அணி அபார  வெற்றியை  ஈட்டிக்  கொண்டது

ஏழாவது  தடவையாக  நடத்தப்பட்ட இப்  போட்டியில்  கடந்த  காலத்தில்  இரண்டுக்கு என்ற  சமநிலை  வெற்றியையும்  இரண்டு  தடவை  சமநிலையிலும்  முடிவடைந்த  இப் போட்டி  இவ்  வருடத்துடன்  மூன்றுக்கு  இரண்டு என்ற  வெற்றி  வீதத்தை இந்துக்கல்லூரி  மாற்றி  அமைத்துள்ளது

 

 

இப்  போட்டியின்  ஆட்ட  நாயகனாக   இந்துக்கல்லூரி வீரன்  அனுக்சன்  தெரிவு  செய்யப்பட்டடார்  இவர் 84 ஓட்டங்கள்  மற்றும்  மூன்று  விக்கற்றுக்களையும்  வீழ்த்தி  உள்ளார்     சிறந்த பந்து  வீச்சாளராக அதே  அணியை சேர்ந்த பார்த்தீபன் இரண்டு  இனிங்ஸ் களிலும் பதினோரு விக்கற்றுக்களை வீழ்த்தி  உள்ளார்  இப் போட்டிக்கான அனுசரணையை  எயார்டேல்  நிறுவனத்தினர்  வழங்கி இருந்ததுடன்  நேரடி  வர்ணனையை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களான சஞ்சை, ராம்கி  மற்றும்  மத்திய கல்லூரி பழையமாணவன்  நிதர்சன்  ஆகியோர்  வழங்கி இருந்தனர்  என்பதும்  குறிப்பிடத்தக்கது

Facebook Comments