கேகாலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலையும், நேற்றுக் காலையும் ஏற்பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 150 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேற்றுமுன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் அரநாயக்க பகுதியில் உள்ள மூன்று கிராமங்கள் முற்றாக நிலத்தில் புதையுண்டன. அங்கிருந்த 180 பேர் வரை மீட்கப்பட்ட போதிலும், 200 குடும்பங்களின் கதி தெரியவில்லை.

அதேவேளை, நேற்று அதிகாலை, புலத்கொஹுபிட்டியவில் ஏற்பட்ட நிலச்சரியில், 16 பேர் காணாமற்போயினர்.

இரண்டு இடங்களிலும், முழு வீச்சில் தேடுதல், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று, இரண்டு நிலச்சரிவுப்பகுதிகளில் இருந்தும் 17 சடலங்கள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளன.

அரநாயக்க பகுதியில், 134 பேர் காணாமற்போயிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளதாக, அந்தப்பகுதியில் மீட்புப்பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இதற்கிடையே, சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றினால், 37 பேர் பலியாகியுள்ளதாகவும், பெருமளவானோர் காணாமற்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்
நன்றி JVP news.

aranayake-landslidde-04

Facebook Comments