வடமாகாண முதலமைச்சர் இன்று  காலை  9.00  மணியளவில்  கிளிநொச்சிக்கு   விஜயம்  ஒன்றை  மேற்கொண்டிருந்தார்  கிளிநொச்சிக்கு   விஜயம்  செய்த  அவர்

கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட சந்தை கட்டட தொகுதிகளையும் குடிநீர் திட்ஙகங்களையும் வடக்கு மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் இன்று  ஆரம்பித்து வைத்தார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் ஏற்பாட்டில் அதனுடைய செயலாளர் கனேசன் கம்சநாதன் தலைமையில் சந்தை கட்டட தொகுதிகள் மற்றும் குடிநீர் விநியோக திட்டகளை திறந்து வைக்கும் நிகழ்வு  இன்று  காலை 9. 30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
ஸ்கந்த புரம் மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் நெல்சிப் திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்ட 16 கடைத்தொகுதிகளும் மலையாள புரத்ததில் வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் அமைக்கப்பட்ட குடிநீர்த்திட்டமும், மற்றும் வட்டக்கச்சியில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு ஆகியனவே வடக்கு முதல்வரால் இன்று  திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு. பசுபதிப்பிள்ளை, வை. தவநாதன், வடக்கு மகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், பிரதி பிரதம செயலாளர் எஸ்.யூ. சந்திரகுமாரன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி வி. கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந. பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர கலந்து கொண்டனர்.DSC_0010 DSC_0014 DSC_0019 DSC_0026 DSC_0029 DSC_0056 DSC_0061 DSC_0071 DSC_0080 DSC_0092 DSC_0099 DSC_0105 DSC_0114 - Copy DSC_0118 - Copy DSC_0131 DSC_0143 - Copy DSC_0151 - Copy DSC_0154 - Copy DSC_0157 - Copy
Facebook Comments