மத்திய அரசில் இருந்து திட்டங்களை வடக்கிற்கு கொண்டுவருவதில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் திவீர முயற்சி
——————————————————————
மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்த தலைவர்கள் வடக்கிலேயே வாழ்ந்தார்கள் -நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர்
நீர்வழங்கள் மற்றும் வடிகால் அமைச்சர் நேற்று 19.05.2016 யாழ்ப்பாணம் கச்சேரியில் வடக்கு மாகான சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களுடன் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வடிகால் சீரமைப்பு குளங்களை தூர்வாருதல் புனரமைத்தல் போன்ற அவசரமான அவசியமான விடயங்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடப்படது.
யாழ்ப்பாண மக்கள் நிலத்தடிநீர் தரை மேல் நீர் தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாழ்ப்பான நிபுணர்களினால் ஆராயப்பட்டு அமைச்சருக்கு விளங்கப்படுத்தப்படது.யாழ்ப்பாணத்தில் இப்படி நிபுணத்துவம் மிக்கவர்கள் இருந்தும் நீர்ப்பிரச்சனைகள் நீண்டகாலம் தீர்க்கப்படாமல் இருந்தமை தனக்கு வியப்பளிக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன் அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு இன்னும் இரு வாரங்களில் செயற்பாடாக தொடங்கும் என்றும் தெற்கில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்திகள் நடைபெறுகின்றதோ அதே போல வடக்கும் அதிகளவில் கவனிக்கப்பட வேண்டும் என தமது கட்சி தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் கட்டாயா பணிப்பினை விடுத்திருக்கின்றார்.இந்த பணிப்பு அங்கஜன் இராமநாதனுக்கும் விடுக்கபட்டுள்ளது நீங்கள் அவரிடம் இதன் நம்பகரத்தன்மையை அறியலாம் என்றார்
தொடர்ந்தும் பேசுகையில் ,அப்பாத்துரை , ரவிராஜ் ,தம்பிமுத்து, போன்ற அரசியல் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் போராடி தம்முயிர்களை அர்ப்பணிக்கும் அளவில் இருந்தார்கள் அப்படிப்பட நல்ல தலைவர்கள் இங்கேதான் வாழ்ந்தார்கள்.அவர்கள் வழியில் தான் அங்கஜனும் இன்று மக்கள் நலனுக்காய் மத்திய அரசிலிருந்து தன்னால் முடிந்தவற்றை வடக்குக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் அதிக முயட்சி உடையவர் .நான் யாழ்ப்பாணத்திற்கு வந்தவுடன் அவர் பிரச்சினை இருக்கும் இடங்களுக்கும் மக்களிடமும் என்னை அழைத்து சென்றார்.இப்போது எனக்கு அதிக வேலைகளை யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.13227140_10156823498370567_384269997394956164_n[1] 13230248_10156823499095567_5495941787077648760_n[1] 13254538_10156823499365567_6738471085035521280_n[1] 13263720_10156823499450567_2158012769906599352_n[1]
Facebook Comments