வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட  மக்களோடு கிளிநொச்சி  அனர்த்த  முகாமைத்துவ  பிரிவுடன்    களத்தில்  பரந்தன்  ஒன்றியம்

 

வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட   அனர்த்த  முகாமைத்துவ  பிரிவுடன்    இணைந்து   பரந்தன்  ஒன்றியம்  நிவாரப்பணியினை  ஆரம்பித்துள்ளது

இன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான  நிவாரனப்பணியை  ,முன்னெடுத்த  சுவிஸ்  நாட்டை  தளமாக  கொண்டு புலம்பெயர்  தமிழ் மக்களின் நிதி அனுசரணையுடனும் பரந்தனில் உள்ள  செயற் குழுவுடன்  இயங்கும்  பரந்தன்  ஒன்றியம் 444 குடும்பம்களுக்கு  நிவாரனப்பொதியை  வழங்கி  உள்ளனர்

பரந்தன்  பகுதியை  அண்மித்துள்ள காஞ்சிபுரம்  கிராமத்தில்  உள்ள 94  குடும்பங்களுக்கும் குமரபுரம் கிராம  அலுவலர்  பிரிவில்  உள்ள 230 குடும்பங்களுக்கும் உருத்திரபுரம்  கிழக்கு  கிராமசேவையாளர்  பிரிவில்  உள்ள120 குடும்பங்களுக்கும்  இன்று  கிளிநொச்சி  மாவட்ட  அனர்த்த  முகாமைத்துவ  பிரிவுடன்    இணைந்து   நிவாரனப்பொதிகளை  வழங்கி  உள்ளனர்

 

இவ்  நிவாரப்பணியில் கிளிநொச்சி மாவட்ட   அனர்த்த  முகாமைத்துவ  பிரிவு உத்தியோகத்தர்கள் ,கிராமசேவையாளர்கள் ,பரந்தன் ஒன்றிய நிர்வாகத்தினர் ,மக்கள் என  பலரும்  கலந்து கொண்டனர்

 

இதன்போது  மக்கள் கருத்து  தெரிவிக்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட   எங்களுக்கு  எங்கள் நிலைமை  உணர்ந்து கிளிநொச்சி மாவட்ட   அனர்த்த  முகாமைத்துவ  பிரிவுவுடன்   இணைந்து  இவ்  உதவியை  செய்த  பரந்தன்  ஒன்றியத்திற்கும் அவர்களுக்கு  நிதி  அனுசரணையை வழங்கு கின்ற  புலம்பெயர்  உறவுகளுக்கும்  நன்றிகளை தெரிவிப்பதோடு எம்மைப்போன்று  பதிக்கப்பட்ட  அனைத்து  உறவுகளுக்கும்  உதவ  வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டனர்

_MG_0016 _MG_0085 _MG_0091 _MG_0097 _MG_0102 _MG_0117 _MG_0122 _MG_0126 _MG_0145 _MG_0150 _MG_0153 _MG_0170 _MG_0175 DSC01346 DSC01349 DSC01351 DSC01353 DSC01374

Facebook Comments