கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முற்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தைப் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த பல மாதங்களாக சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நீதிமன்ற அனுமதியின் பேரில் பிள்ளையான் பொலிஸாரின் பாதுகாவலுடன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதன்போது அங்கிருந்த ஒரு ஊடகவியலாளர் பிள்ளையானை புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார்.

அதைக் கண்டு கடும் கோபமுற்ற பிள்ளையான், நீ எந்த மீடியா என்று கேட்டவாறு முஷ்டியை உயர்த்திக் கொண்டு ஊடகவியலாளரைத் தாக்கப் பாய்ந்துள்ளார்.

அதன் போது அவருக்கு கையில் கைவிலங்கு மாட்டியிருக்கவில்லை என்பதுடன், பிள்ளையானின் பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிஸார் உடனடியாகத் தலையிட்டு ஊடகவியலாளரைப் பாதுகாத்து, பிள்ளையானையும் அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

Facebook Comments