தமது கடமை நேரத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், அரச ஊழியர்கள் தங்கள் கடமை நேரத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கூடுதல் நேரத்தைச் செலவிடுவது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அண்மையில் தொழிற்சங்கம் ஒன்று மேற்கொண்ட சுயாதீன ஆய்வொன்றின் பிரகாரம் ஒவ்வொரு அரச ஊழியரும் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள பாவனை மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு ஒன்பது இலட்சம் அரச ஊழியர்கள் சேவையில் உள்ளனர். இதன் பிரகாரம் ஒருநாளைக்கு பதினெட்டு இலட்சம் மணித்தியாலங்கள் மனித உழைப்பு வீணடிக்கப்படுகின்றது.

இதனைக் கருத்திற் கொண்டே அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளது

Facebook Comments