இந்தியாவில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வெளியிட்ட காணொளியில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி வெளியான இந்தக் காணொளியில் இந்தியர்கள் 11 பேர் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் இருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கடலூரை பூர்வீகமாக கொண்ட உஸ்மான் அலி என்பது தெரிய வந்துள்ளது.

அவனது குடும்பத்தினர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சிரியாவிற்கு சென்ற அந்த நபர் ஜிகாத் அமைப்பில் சேர்ந்துள்ளார் என்று தெரிவியவந்துள்ளது.

இந்தியாவுக்கு திரும்பிய உஸ்மான் 2014ஆம் ஆண்டில் மீண்டும் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளான். மற்றொருவன் கடலூரை சேர்ந்த குல் முகமது மரக்கச்சி மரக்கையார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் தலைமை பொறுப்பில் உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்கு திரும்பி மிகப்பெரும் தாக்குதலை நடத்த இருப்பதாக குறித்த காணொளியில் மிரட்டியுள்ளனர்.

இந்தியாவை பழிவாங்க தாக்குதலை அரங்கேற்ற போவதாகவும் மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் தாம் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments