வன்னியின் பெரும் போர்  துடுப்பாட்டப்போட்டி  நாளை  ஆரம்பம் .. இத்துடுப்பாட்டப்போட்டி 2006ல் முதல்முதல் நடைபெற்றது.இப்போட்டி கிளி றோட்டிகோ மைதானத்தில் நடைபெற்று சமநிலையில் முடிந்தது.  போட்டி2007ல்…….புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.இதில் புதுக்குடியிருப்பு ம.வியினர் வென்றனர்.

 . 2009 நாட்டில்  நிலவிய  யுத்தத்தின்   பின்னர் 2013ல் மீண்டும் வன்னியின் பெரும்போர் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.போர்வலியோடு நடைபெற்ற இப்போட்டியில் கிளிநொச்சி ம.வியினர் வென்றனர்.இப்போட்டியில் இரு மாவட்ட அரசாங்க அதிபர்களும் இரண்டு வலய கல்விப்பணிப்பாளர்களும் ஒருங்கே கலந்து சிறப்பித்தனர்.
. 2014 வன்னியின் பெரும்போர் கிளிநொச்சியில்……………இன்றுவரை முறியடிக்கமுடியாத அளவில் மிக பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் எல்லோர் மனத்திலும் ஆழப்பதிந்த போட்டியாகவும் இப்போட்டி அமைந்தது.வெற்றியை கிளி ம.வியினர் நெருங்கிய போதும் மழையால் போட்டி சமநிலையானது . 2015 புதுக்குடியிருப்பில் நட்புகிண்ணம்……….. கிண்ணம் வெல்லும் முழுமையான வாய்ப்பும் புதுக்குடியிருப்பு ம.கல்லூரியினருக்கு இருந்தபோதும் கிளி ம.வியினரின் மாணவர் ஆசிரியர் வழங்கிய மைதான ஆதரவுடன் போட்டியை சமன்செய்தனர் கிளி ம.வியினர்.இப்போட்டியை தொடர்ந்தே பழைய மாணவர்களுக்கான போட்டியும் நடைபெற்று பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது
 
அதனைத்தொடர்ந்து  நாளை 2016 ம் ஆண்டிற்கான   வன்னியின் பெரும் போர் கிளிநொச்சி  மகாவித்தியாலய  மைதானத்தில்  நடைபெற  உள்ளது
Facebook Comments