கிளிநொச்சி  பொலிசாரின்  பொதுமக்கள்  தொடர்பாடல்  பொலிஸ் பிரிவால் இன்று வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கான    உலர் உணவுப்  பொதிகள்  வழங்கி  வைப்பு

கிளிநொச்சி பொதுமக்கள்  தொடர்பாடல்  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி  குனறோயன்  தலைமையில் இன்று  பத்து மணியளவில்  கிளிநொசசி ஆனந்தபுரம்  பொதுநோக்கு மண்டபத்தில்  நடைபெற்ற  இன்  நிகழ்வில்  வடமாகாண  சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர்  எஸ் . கணேசநாதன்  சிறப்பு  அதிதியாக  கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட  மக்களுக்கான  உலர் உணவுப்  பொதிகள்  வழங்கி ஆரம்பித்து  வைத்தார்  இவ் நிவாரனபொதிகளுக்கான அனுசரணையை  ஞானம்  பாவுண்டேசன்  அமைப்பினர்  வழங்கி  இருந்தனர்
குறித்த  நிகழ்வு  கிளிநொச்சி  மாவட்டத்தில்  உள்ள  ஆறு  கிராம சேவையாளர்  பிரிவில்    நடைபெற்றது  இதில்  ஆனந்தபுரம்  கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த  41  குடும்பங்களுக்கும், அபாள்குளம் கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த  29   குடும்பங்களுக்கும்,அம்பாள்நகர் கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த  14 குடும்பங்களுக்கும் ,ஊற்றுப்புலம்  கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த 76  குடும்பங்களுக்கும் , பாரதிபுரம்  கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த   75  குடும்பங்களுக்கும், பிரமந்தனாறு  கிராம சேவையாளர்  பிரிவை சேர்ந்த  65 குடும்பங்களு க்கு ம்   வழங்கப்பட்டது    மொத்தமாக  300 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவுப்  பொதிகள்  வழங்கப்பட்ட்டுள்ளது
இன்  நிகழ்வில்  வடமாகாண  சிரேஸ்ட  பொலிஸ்  அத்தியட்சகர்  எஸ் . கணேசநாதன் கிளிநொச்சி பொதுமக்கள்  தொடர்பாடல்  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி  குனறோயன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஞானம்  பாவுண்டேசன்  அமைப்பு  உத்தியோகத்தர்கள் ,குறித்த  கிராமங்களின்  கிராம சேவையாளர்கள் , மக்கள் என  பலரும்  கலந்து  கொண்டனர் _MG_0568 _MG_0571 _MG_0579 _MG_0596 _MG_0598 _MG_0603 _MG_0606 _MG_0608 _MG_0611
Facebook Comments