வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும்  இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்க்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் கடினப்பந்து சுற்றுப்போட்டி இந்த வருடம் 2016ம் ஆண்டு ஆறாவது முறையாக கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 27/05/2016 இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது .

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் கிளிநொச்சி வலைய வலையம் கல்வி பணிப்பாளரும் தற்ப்போதய வடமாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள் .,விளையாட்டுத்துறை  மற்றும்  இளைஞர்  விவகார    அமைச்சர் கெளரவ த.குருகுலராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நடைபெற்ற நாணைய சுழற்சியில்  புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வெற்றி பெற்றுக்கொள்ள அணித்தலைவரால் களத்தடுப்பு தீர்மானிக்கப்பட்டது தொடர்ந்து துடுப்பெடுத்தாட தயாராகிய கிளிநொச்சி மகா வித்தியாலய அணி 41 பந்து பரிமாற்றங்களில் 8 விக்கற் இழப்புக்களிற்கு மொத்தமாக 241 ஓட்டங்களை பெற்ற வேளை தமது வெற்றி இலக்குக்கு ஓட்டங்கள் போதுமென அணித்தலைவரால் தீர்மானிக்கப்பட்டு துடுப்பாட்டத்தை இடை நடுவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிடம் கொடுத்தது.
 
 
அப்போட்டியில் அணித்தலைவர் பேபிசன் தனது அணிக்காக 66 ஓட்டங்களையும் யதுசன் 57 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர் அதனைத்தொடர்ந்து வெற்றி இலக்கை தீர்மானித்து களமிறங்கிய புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி மொத்தமாக 49 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கற் இழப்பிற்கு 80 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தது. அவ்வேளை இருள் சூழ்ந்து _MG_0632 _MG_0634 _MG_0635 _MG_0672 _MG_0673 _MG_0674 _MG_0678 _MG_0683 _MG_0684 _MG_0691 _MG_0693கொள்ள போட்டி இடை நடுவே நடுவர்களால் நிறுத்தப்பட்டு  தொடந்து நாளை காலை 9மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகும் என நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டத்தை அடுத்து இன்று ஆட்டங்கள் நிறைவிற்கு வந்தது
Facebook Comments