அண்மையில் கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் அமைந்துள்ள வீட்டு கிணற்றொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், யுத்த காலத்தில் புதைக்கப்பட்டவை என்றும், இவை பாவனைக்கு உதவாதவை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆயுதங்களைப் போன்று, இன்னும் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் அமைந்துள்ள வீட்டு கிணற்றினைத் துப்புரவு செய்யும்போது, அங்கிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும், இந்த ஆயுதங்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாகவும், இது யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளினால் பதுக்கி வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறினார்.

இவ்வாறான ஆயுதங்கள் தொடர்பில் பொதுமக்கள் தமக்கு தகவல் வழங்குமாறும், இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று கூறிய அவர், பொதுமக்கள் இராணுவத்தினருக்கு வழங்கும் ஒத்துழைப்பினை வரவேற்றார்.

 

Facebook Comments