நாடாளவிய ரீதியில் செவ்வாய் கிழமை மருத்துவர்களை நான்கு மணித்தியாலயங்கள் பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் மருத்துவர்கள்  அடையாள பணிப்பகிஸ்கரிபில் ஈடுப்பட்டனர்.
இது தொடர்பில் செய்தி சேகரி கிளிநொச்சி மாவட்டபொது மருத்துவமனைக்கு சென்ற கிளிநொச்சியை சேர்ந்த சில பிராந்திய செய்தியாளர்கள் மருத்துவமனையின் பதில் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் நிசாந்தி ரணசிங்க மற்றும் அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய  சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜெயராசா ஆகியோருடன் பணிபகிஸ்கரிப்பு தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் அவர்களின் அனுமதி பெற்று வைத்தியசாலையில் வெறிசோடியிருந்த வெளிநோயாளர் பிரிவை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதன் போது அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊடகவியலாளர்களை பணியாளர்களை கொண்டு கடும் தொனியில் அழைத்து யாருடைய அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கின்றீர்கள் என வினவியுள்ளார் இதன் போது ஊடகவியலாளர்கள் தாங்கள் மேற்படி பொறுப்பானவர்களின் அனுமதி பெற்று விடயத்தை கூறிய போதும் ஏற்றுக்கொள்ளதா குறித்த மருத்துவர் ஊடகவியலாளர்களை காக்க வைத்து, தொலைபேசியின் ஊடாக பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதன் போது தனது அனுமதி பெற்று ஊடகவியலாளர்கள் செயற்படுவதாக பணிப்பாளர் தெரியப்படுத்தியதனை தொடர்ந்து வீழ்ந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை என்ற நிலையில் ஊடகவியலாளர்களை திட்டி தீர்த்துள்ளார்.
இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் தாங்கள் உரிய முறைப்படி உரியவர்களின் அனுமதி பெற்றே தங்களின் கடமையினை மேற்கொண்டதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்
Facebook Comments