மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு நாள் தையல் பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு சுயதொழிலிற்காக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்ட பயனாளிகளிற்கே இவ்வாறு பயற்சி வகுப்பு இன்று முன்னெடுக்கப்பட்டது,

சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த பயிற்சி வகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய பயிற்சி வகுப்பின் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் பங்கு கொண்டிருந்தார். இரு மாவட்டங்களையும் சேர்ந்த 50 பேர் இன்றைய பயிற்சி வகுப்பில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

20160531_120711 20160531_120731 20160531_120753

Facebook Comments