கிளிநொச்சியில் விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்ட பெறுமதி மிக்க பாலை, தேக்கு மர குற்றிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய கனகபுரம் பகுதியில் கப் ஒன்றில் ஏற்றிவரப்பட்ட பாலை மரக்குற்றிகளும், ஊற்றுப்புலம் பகுதியில் மற்றுமொரு கப் வாகனத்தில் ஏற்றப்பட்ட தேக்கு மரக்குற்றிகளும் வனவள பாதுகாப்பு திணைக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் 3 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரக்குற்றிகளை ஏற்றி சென்ற வாகனமும், செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 5 லட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தொடர்ச்சியாக மாவட்டத்தின் வளங்கள் சூரையாடப்படுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருந்து, அவ்வாறு சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல்களை வழங்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20160531_115911 20160531_115947 20160531_120007

Facebook Comments