வட்டக்கச்சி  இராமநாதபுரம்  பொலிஸ்  நிலையத்திற்கு பின்புறமாக  உள்ள விடுதலைபுலிகளின்  நிலக்கீழ்  பதுங்கு  குழி அமைந்துள்ள இடத்தில்   வழமைக்கு மாறான  செயற்பாடுகள்  நடை  பெற்று  வருகின்றன

நேற்று ( 31) இரவு   இனந்தெரியாத  நபர்களால்   குறித்த  பதுங்கு  குழி அமைந்துள்ள காணியில்  இரண்டு  சிறிய   குழிகள்  தோண்டப்பட்டு  தேடுதல் நடவடிக்கை  ஒன்று  நடத்தப்பட்டுள்ளது  குறித்த  காணியில்  இன்று  காலை  தொடக்கம்  571 படைப்பிரிவு  இராணுவத்தினர்  சிலர்  கண்காணிப்பு  நடவடிக்கைகளுக்காக  பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
யுத்தம்   முடிவடைந்த  பின்னர்  பதுங்கு  குழி  அமைந்துள்ள  காணி  இராணுவத்தினரின்  சிறிய  காவலரண்  ஒன்று  போடப்பட்டு  காவலில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்  எனினும்  குறித்த  காவலரண்  ஒருவருடத்திற்கு  முன்னர்  அகற்றப்பட்டுள்ளது
குறித்த  பகுதிக்குள்  என்றுமே  வந்திராத  பயங்கரவாத  தடுப்பு  பிரிவினர்  மற்றும்  போலீசார்  அடங்கிய  குழுவினர்  கடந்த  மாதம் (29.05.2016)  அன்று பகல்  வேளை மூன்று  வாகனங்களில்  வந்து  இரண்டு  மணிநேர  தேடுதல் நடவடிக்கை  ஒன்றினை  மேற்கொண்டிருந்ததாகவும்  அதன் பின்பு  நேற்றயதினம்  இனந்தெரியாதவர்களால்  இரவு  வேளையில்  குழிகள்  தோண்டப்பட்டு  தேடுதல்  நடத்தப்பட்டுள்ளமை  மீண்டும்  ஒரு  அச்ச  உணர்வை  தோற்றுவித்திருப்பதாக  அக்  கிராம  மக்கள்  தெரிவிக்கின்றனர்
இருப்பினும்  குறித்த  சம்பவங்கள் தொடர்பான  முழுமையான   தகவல்  எதனையும்  பெற்றுக்கொள்ள  முடியவில்லை  என  அங்கிருக்கும் எமது  செய்தியாளர்  தெரிவிக்கின்றார்  _MG_1350 _MG_1365 _MG_1368 _MG_1374 _MG_1375 _MG_1378 _MG_1381 _MG_1382
Facebook Comments