அதிகாரிகளின் அசமந்த போக்கினால்  ஒருவர் வைத்தியசாலையில்

அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பொது மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். இதில் ஒன்றுதான் வீதியில் பாலம் அமைப்பதற்காய் வெட்டப்பட குழியில் விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிளிசொச்சி உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம் வீதியில் பாலங்கள் அமைப்பதற்கு வெட்டப்பட்ட இடத்தில் சமிக்கைகள் எதுவும் அற்ற நிலையில் கணப்பட்டுள்ளது. இவ்வீதியில் வேகமாய் வரும் வாகனங்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றது அதில் ஒன்றுதான்  03.06.2016 நேற்று இரவு ஒருவர் வீதியில் வெட்டப்பட்ட குழியில் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சில அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் மக்கள் மிகவும் சொல்லன்னா துன்பங்களுக்கு இழக்காகிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செயற்படும் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளும் இவர்களுக்கு உடைந்தையாக இருக்கிறார்கள் என்று மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.13342410_487252318136293_41052854_n 13384924_487252588136266_1282907557_n
Facebook Comments