தமிழினியின் கணவர்  ஜெயக்குமாரின்  உயிருக்கு அச்சுறுத்தல்  என   கிளிநொச்சிமீடியா  இணையத்தளத்தின்   நேர்காணலின்  போது  தமிழீழ  விடுதலைப்புலிகளின்  மகளீர்  அரசியல்துறை  பொறுப்பாளராக  இருந்த   தமிழினியின் கணவர்  ஜெயக்குமார்  தெரிவிப்பு

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக    ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு இருந்தது  அதனைத்  தொடர்ந்து   இன்றைய  தினம்  .தமிழினியின் கணவர் ஜெயக்குமாருடன்   கிளிநொச்சி  மீடியாவின்  அலுவலகச்  செய்தியாளர்  ஒரு  நேர்காணலை  நடத்தி  இருந்தார்
 அவ்  நீர்காணலில்  உங்களது  உயிருக்கு   அச்சுறுத்தல்   என   ஆங்கில  இணையம்  ஒன்று  செய்தி  வெளியிட்டுள்ளதே  இது  உண்மையா  இது  சம்பந்தமான  கருத்து  என்ன  என்று  எமது  அலுவலக  செய்தியாளர்  தொடுத்த  கேள்விக்குக்கு  பதிலளித்த  அவர்
ஆம்  அவ்வாறு  ஒரு  நிலைமை  இருக்கின்றது   எனக்கு  எப்போது  என்ன   நடக்கும்  என்று  தெரியாத  நிலைமை  உள்ளது  என்னுடன்  பேசிக்கொண்டு  இருப்பவர்கள்கூட  எனக்கு  ஏதாவது  செய்து    விடுவார்களோ  என்று  சிந்திக்கும்  அளவிற்கு  வெளியில்  உள்ள சமூக தளங்களின்  கருத்து  பரிமாற்றம்  உள்ளது  எனது  நிலைமையை  ஒரு  ஆங்கில  இணையத்தள  செய்தியாளருடன்  உரையாடி  இருந்தேன்   அவர்கள்  அதனை  செய்தியாக     பிரசுரித்து  இருந்தார்கள்  அதனை  தமிழில்  மொழிபெயர்த்து   செய்தியாக  பிரசுரித்துள்ள  சில  தமிழ்  ஊடகங்கள்   கருத்துக்களை  விளக்கம்  இல்லாமல் செய்தி  வெளியிட்டு   உள்ளதாக  தெரிவித்தார்
அதனை  தொடர்ந்து  உங்களுக்கு   உயிருக்கு   அச்சுறுத்தல்  உள்ளது  என  கூறுகின்றீர்கள்  அது  எவ்வாறு  என்பதனை  சற்று  விளக்கமாக  கூற  முடியுமா  என  எமது  செய்தியாளர்  தொடுத்த  அடுத்த  கேள்விக்கு  விளக்கம்  அளித்த  அவர்
தமிழினியின் ஓர்  கூர்வாளின் நிழல் நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக   குறிப்பிட்ட   அவர்  மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர் தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து  அவர்களிடம்   உள்ள  பணத்திற்கு  யாரும்  கணக்கு  கேட்டு  விடக்கூடாது  என்பதற்காக   அவ்வாறான  செய்திகளை  பரவ  விட்டிருப்பதாகவும் இவ்  நூல்  வெளிவந்ததில்  இருந்து  அவர்களது  கருத்துக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட  வில்லை இதனால்  ஐரோப்பாவின் சில பகுதிகளில் தமிழ் வர்த்தக நிலையங்களில் இந்த நூல் விற்பனை செய்ய செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் அங்கிருப்பவர்கள்  தனக்கு   தெரிவித்ததாக  தெரிவித்தார்
அவர்  தொடர்ந்து  குறிப்பிடுகையில்  இவ்வாறு  பலதரப்பட்ட   எதிர் மாறான  கருத்துக்களும்  பிரச்சனைகளும்  சமூக தளங்களில்  பரவி  இருப்பதனால்   தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களினால்   பிரச்சனைகள்  வரலாம்  இதனால்  நான்  பிரித்தானியாவிற்கு  மீண்டும்  செல்வதா   அல்லது   எனக்கு  இலங்கை  பாதுகாப்பானதா  என்ற  முடிவைக் கூட  எடுக்க   முடியவில்லை  என  குறிப்பிட்டார்
கிளிநொச்சி மீடியா  செய்திகளுக்காக   எஸ் .என்  .நிபோஜன்
Facebook Comments