வடக்கு மீள் குடியேற்றம் தொடர்பான முடிவுகளில்  மாற்றமில்லை -ஜ

னாதிபதி அங்கஜன்இராமநாதனுக்கு  தெரிவிப்பு

கடந்த புதன் கிழமை அதாவது 01.06.2016 அன்று வெளியானஅச்சு ஊடகமொன்றில்  “மயிலிட்டியை விடுவிக்க ராணுவம் கடும் எதிர்ப்பு “என்ற பிரதான தலைப்பின் கீழ் இடம் பெற்ற செய்தியில் மயிலிட்டி பிரதேசத்தை விடுவிக்க ராணுவம் கடும் எதிர்ப்பை காட்டியதாகவும் சனாதிபதி அவர்கள் மாற்றுவழி ஒன்றை மயிலிட்டி பிரதேச மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக  முன் வைக்குமாறும் பணித்ததாக  செய்தி இடம்பெற்றிருந்தது.இச் செய்தி தொடர்பாக நான் சனதிபதியுடன் நேரடி சந்திப்பின் போது கலந்துரையாடினேன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் ,கலந்துரையாடலின் போதுசனாதிபதி அவர்கள் எனக்கு தெரிவிக்கையில்  ,” என்னுடனான கலந்துரையாடலின் போது இராணுவத்தினர் மயிலிட்டி பிரதேசம் தொடர்பில் எதிர்ப்பினையோ காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன் வைக்கவில்லை.நான் வடக்கில் மீள்  குடியேற்றம் தொடர்பாக கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன்.என்னால் வடக்கு மக்களுக்கு மீள்  குடியேற்றம் தொடர்பாக கொடுக்கப்பட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை .சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்.நீண்ட காலம் போர் நடைபெற்ற பிரதேசங்களாய் அவை காணப்படுவதால் அக்காணிகளை துப்பரவு செய்து பாதுகாப்பாக மக்களுக்கு கையளிக்க வேண்டியது என் பொறுப்பாகும் அதன் காரணமாகவே சிறிது தாமதம் ஏற்படுகிறது.”என சனாதிபதி கூறியதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி ,தையிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் குடி பெயர்ந்து தம் சொந்த நாட்டில் அகதிகளாக இரண்டாவது தலைமுறையாகவும் வாழத்தொடங்கி விட்டனர்.இதனால் அவர்கள் உணர்வு ரீதியாக இழந்தவை ஏராளம்.அதை நான் உணர்வேன்.இந்த மக்களுக்கு தம் சொந்த நிலங்களில் வாழும் நிலையை எப்படியேனும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன்.மயிலிட்டி தையிட்டிமற்றும் ஏனைய பிரதேச   மக்கள் தம் சொந்த நிலங்களில் குடியேறும் வரைக்கும் நான் சனாதிபதிக்கு கடும் அலுத்தங்களிக் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.இதனால் மக்கள் யாரும் வீணாக கவலை கொள்ளத்தேவையில்லை.என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
Facebook Comments