காவேரி கலாமன்றத்தின் 12 வது ஆண்டு விழாவும் சமூக காவலர் விருது வழங்கும் நிகழ்வும்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில்

இயங்குகின்ற காவேரி கலாமன்றத்தின் 12வது ஆண்டு விழாவும் சமூக காவலர் விருது வழங்கும்

நிகழ்வும் 04.06.2016 அன்று மாலை 2.00 மணியளவில் யாழ்ப்பாணட் வீரசிங்கம்

மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன்

அவர்கள் பிரதம விருந்தினராகவும், பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை,

பேராயர் ஜெபநேசன்ரூபவ் வாசுதேவ குருக்கள் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து

கொண்டனர். வீரசிங்கம் மண்டம் நிறைந்த சனத்திரளின் மத்தியில் ஆரம்பமான இந்நிகழ்வு

காவேரி கலாமன்றத்தின் பணிகள் தொடர்பான ஒளிப்படக் காட்சியுடன் ஆரம்பமாகியது.

விருந்தினர்கள் தமிழர் பாரம்பரியமுறைப்படி பறையிசையும் தமிழ் வேந்தர்களின்

அலங்கார பவனியுடனும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.

வடக்குமாகாணத்தில் தனது சமூகரூபவ் கலைஇலக்கிய பணிகளை ஆற்றி வரும் காவேரி கலாமன்றம்

இப்பிரதேங்களில் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றிவருபவர்களை இனங்கண்டு

அவர்களுக்கு ‘சமூக காவலர்’ விருது – 2016 எனும் விருதினை வடக்குமாகாணத்தில் இருந்து தெரிவு

செய்யப்பட்ட பன்னிரண்டு பேருக்கு வழங்கி அவர்களின் பணிகள் கௌவிக்கப்பட்டது.

தொடந்து. யாழ்ப்பாணத்தில் காணி இன்றி மிகவும் வறிய நிலையில் இருந்த மூன்று

குடும்பங்களுக்கு காவேரி காலாமன்றம் காணி கொள்வனவு செய்து அவர்களுக்கு வழங்கி இருந்தது.

இதற்கான உறுதி வழங்கும் வைபவம் காணிநிலம் வேண்டும் எனும் தொனிப் பொருளில்

நிகழ்ந்தது.

தொடர்ந்து பேச்சுப் போட்டிகளில் வெற்றியீட்டியர்களுக்கான பெறுமதி வாய்ந்த

பரிசில்களும் அதற்கான ஒளவையார் விருதும் வழங்கப்பட்டு இந்த ஒளவையார் விருது

வடக்குமாகாணத்தில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்று வருடாவருடம் வழங்கப்படும் என்றும்

தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரதமவிருந்தினர்  சிறப்பு விருந்தினர்களின் உரையும் நடன நிகழ்வும் இடம்

பெற்று மாலை 6.00 மணியளவில் விழா இனிதுற நிறைவடைந்தது.

 

 

 

IMAG2177 IMAG2180 IMAG2183 IMAG2188

Facebook Comments