முச்சக்கர வண்டியின் விலையை விடவும், குறைவான விலையில் நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுகொடுக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக நேற்று தெரிவித்தார்.
குறித்த வாகனம் நான்கு சக்கரங்களை கொண்டது என அமைச்சர் குறிப்பிட்டாலும், அது ஒரு கார் என அவர் குறிப்பிடவில்லை.
தற்போதைக்கு உலகில் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியுமான டாடா நேனோ என்ற காரும், இலங்கையில் 14 இலட்சம் ஆகக் காணப்படுகிறது. அந்த வகையில் அமைச்சர் கூறியது போன்று குறித்த நான்கு சக்கர வாகனம் ஒரு கார் அல்ல.
இந்த வாகனம் Quadricycle என அழைக்கப்படுகிறது. இதன் வரலாறு 1896 வரை நீண்டு செல்கிறது.
உலகப் பிரபல்யம் பெற்ற Ford நிறுவனம் Quadricycle ஐ 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி உற்பத்தி செய்தது. (800px-Ford Quadricycle)
தற்பொழுது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம் Quadricycle ஐ Qute என்ற பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 2000 அமெரிக்கா டொலர்கள் ஆகும் (இலங்கை ரூபாய்களில் சுமார் 3 இலட்சம்)
இந்த வாகனங்கள் சில தற்பொழுது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, தர பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக விரைவில் இந்த வாகனம் இலங்கை சந்தைக்கு வரவிருக்கும் அதேவேளை, அரச பெறுமதி சேர் வரி (VAT) இணைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

Bajaj-RE60-quadricycle

Facebook Comments