அறிவியல் நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியால் பீட, விவசாய பீட மாணவர்களினால் தாங்கள் மழை, மற்றும் வெயில் காலங்களில் பேரூந்திற்கு காத்திருக்கும் பொழுது பெரும் அசொகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தமக்கு வீதியின் இருமருங்கிலும் பஸ் தரிப்பிடம் அமைத்து தரும்படி  கடந்த வருடம் அமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து குறித்த பிரதேசத்தில் பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான அடிகல் நாட்டு வைபவம் 10.06.2016 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக பொறியியல், விவசாய பீட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,  கிளிநொச்சி விவசாய கல்லூரியின் அதிபர்,கிளிநொச்சி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி திணைகளத்தின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், கார்கில்ஸ் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 13392078_10209544951929799_5957548432904078517_o[1][1] 13392237_10209544960010001_4764601843267411640_o[1][1] 13407154_10209544965130129_4567325551469222924_n[1][1] 13418760_10209544916568915_8146634853471080200_n[1][1] 13445630_10209544947169680_611603441324506161_n[1][1]

Facebook Comments