வடமாகாண போக்குவரத்து அமைச்சரினால் இவ்வருடம் ஒவ்வொரு  மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வீதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள தலா 6 மில்லியன் ரூபா நிதியில் இருந்து வடமாகாண சபை கௌரவ உறுப்பினர் தவநாதன் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட மேற்படி வீதி புனரமைப்பு ஆரம்ப கட்ட அடிக்கல் நாட்டும் வைபவம் 10.06.2016 அன்று சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி விவசாய கல்லூரியின் அதிபர் சகிலா பாணு, கிளிநொச்சி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி திணைகளத்தின் பிரதம பொறியியலாளர் ஜெகநாதன் மற்றும் கிராம மட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி வீதியானது பாடசாலை, சந்தை தொகுதி என்பவற்றுக்கான பிரதான வீதியாக காணப்படுவதனால் இதனூடாக பயணம் செய்வதற்கு மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு 900மீட்டர் வீதி புனரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.13321773_10209544824726619_2885889838814169425_n[1][1] 13393906_10209544830526764_9019195792169436315_n[1][1] 13394079_10209544830406761_3402419764977080932_n[1][1] 13412877_10209544825526639_6044416083048709486_n[1][1] 13427725_10209544825486638_3738357348405955108_n[1][1] 13435436_10209544825446637_7441284115422193978_n[1][1] 13450720_10209544827646692_3974816033327293853_n[1][1] 13445498_10209544824686618_5877106878895733212_n[1][1]

Facebook Comments