அக்கராயன் LB Main Channel  நல்லூர் வீதி 630 மீட்டர் புனரமைப்பு பணிகள் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீடில் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் குறித்த வீதியால் பயணம் செய்த அமைச்சர் அப்பகுதியில் மழை காலத்தில் போக்குவரத்துக்கு மக்கள் படும் அவலநிலையை கருத்தில் கொண்டும் மாணவர்கள் சேறு, சகதிக்கூடக பாடசாலை செல்வதை கண்ணுற்றும் குறித்த வீதியை புனரமைபதற்கான பணிப்புரையை அதிகாரிகளுக்கு வழங்கினார். இதன் ஆரம்ப நிகழ்வாக முட்கொம்பன் வீதிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் 10.06.2016 அன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி முல்லைத்தீவு வீதி அபிவிருத்தி திணைகளத்தின் பிரதம பொறியியலாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தனர். அங்கு கருத்துரைத்த அமைச்சர் குறித்த வீதிக்கான புனரமைப்பு பணிகள் தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.13315709_10209545386900673_2814161155508365008_n[1][1] 13406736_10209545385540639_7405766481873576063_n[1][1] 13415484_10209545390820771_161310862301239588_o[1][1] 13418881_10209545388100703_9171960226957044955_n[1][1] 13427890_10209545391980800_1432960196250150507_n[1][1] 13427955_10209545379740494_6851644851932729363_n[1][1] 13427960_10209545389340734_4105115548298021422_n[1][1] 13450790_10209545393820846_2639373812619231343_n[1][1]

Facebook Comments