முறிகண்டி – ஜெயபுரம் வீதியில் அமைந்துள்ள அக்கராயன் சந்தியில் காணப்படும் ஆற்றுக்கு குறுக்கான பாலம் தாழ்வான நிலையில் காணப்படுவதனாலும் மழை காலங்களில் குறித்த பலத்தின் மேலாக 5 அடிக்கு மேல் தண்ணீர் பாய்வதனாலும் ஒரு வாரத்திற்கு மேலாக அப்பாதை தடைப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதனூடாக பாடசாலைகள், மருத்துவமனை, நகரபகுதிக்கு பயணம் செய்யும் அப்பகுதியை சேர்ந்த 5000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் அசொகரியங்களை சந்திப்பதாக அறியக்கிடைகின்றது.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் மேற்படி பாலம் வீதி அபிவிருத்தி திணைக்களம், நீர்பாசன திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளமையினால் அத்திணைக்கள அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதோடு குறித்த பகுதியில் தரமான போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பாலம் ஒன்றை அமைப்பதற்கு மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.13406895_10209545110053752_501242915594895706_n[1][1] 13413585_10209545108173705_5616872472454762188_n[1][1] 13445278_10209545107453687_2500921115605120453_n[1][1] 13450317_10209545111573790_7670695144089724092_n[1][1]

Facebook Comments