தவபாலன் சிவராம் போன்ற மாமனிதர்கள் இருந்த ஊடகத்துறையை சமுக அக்கறையுடன் கொண்டு செல்ல வேண்டும் ஒலி பண்பலை நிகழ்வில்-பொன்.காந்தன் ஒலி பண்பலையால் வடக்கு மாகாண இளம் அறிவிப்பு துறை விரும்பிகளுக்கு இடையில் போட்டியொன்று கடந்த 10ம் 11ம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.இதில் நடுவராகவும் விருந்தினராகவும் கலந்துகொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பொன்.காந்தன் உரையாற்றும்போது நானும் ஒரு ஒலிபரப்பாளர்தான்.2009க்கு முன் நான் ஆற்றிய அந்தப்பணியை வரலாற்றில் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.தவபாலன் சிவராம் நிமலராஜன் நடேசன் உள்ளிட்ட ஊடகத்துறைக்காக தம்மை அர்ப்பணிக்கத்தெரிந்த பெரு மனிதர்களோடு அவர்கள் காலத்தில் விடுதலைக்கான இனத்துக்கான ஊடகப்பணியை செய்யக்கிடைத்தது திருப்தி தருவது.கவிஞர் நாவண்ணன் என்ற பெரும் கவிஞனின் அறிமுகத்தின் மூலம் ஊடகத்துறைக்குள் நுழைந்த நான்; அன்றிருந்த விடுதலைக்கான ஊடகத்தின் மூத்தவர்களின் வழி நடத்தலில் என்னை வளர்த்துக்கொண்டேன்.ஒரு அறிவிப்பாளருக்கு தன் மொழியை சிறந்த முறையில் உச்சசிக்கின்ற திறனும் உலகத்தின் தகவல்கள் பற்றிய அறிவும் சமயோசித புத்தியும் அவசியம்.அறிவிப்பாளர் ஒருவர் படைப்புத்திறன் உள்ளவராக இசையை ரசிக்கத் தெரிந்த வல்லமையுள்ளவரராக இருந்தால்.தொழில்நுட்ப சாதனங்களை கையாளளும் திறனுள்ளவராக இருந்தால் அவருக்கு இரட்டிப்பு பலம் கிடைக்கின்றது. இன்றைக்கு பலர் அறிவிப்புறையெனில் குறுஞ்செய்திகளுக்கான முகவரியையும் தொலைபேசி இலக்கத்தை அறிவிப்பதும் பாடல்களுக்கு முன்னோட்டம் அறிவிப்பதுமே என்று தவறாக புரிந்துகொள்கின்றனர்.ஆரம்ப காலத்தில் இலங்கையில் தாய் வானொலி சொல்லக்கூடிய இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி ஒலிபரப்பாளர்கள் நேயர்களை தம் வசம் கட்டிப்போட்ட விதம் அற்புதமானது.அதற்கு அவர்களின் தமிழ் உச்சரிப்பும் மிகப்பெரிய காரணம்.அறிப்பின்போது தமிழ் மொழிக்குள் ஆங்கிலத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.தமிழை தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் சிங்களத்தை சிங்களமாகவும் உச்சரிக்கின்ற வல்லமையுடையவர்களே ஊடகத்துறையில் நிலையான இடத்தை பெறுவார்கள்.எப் எம் என்று ஆங்கிலத்தில் சொல்வதில் எமக்கு என் இனத்துக்கு என்ன இலாபம்.அதை பண்பலை என்று தமிழில் சொல்வதில் என்ன வெட்கம். நான் ஊடகத்தில் இருந்த சூழலில் எங்களுக்கு குளிரூட்டி வசதி இருக்கவில்லை.வயலை தடவிவரும் காற்றும் காட்டு மரங்களில் உரசி வரும் எங்கள் கலையங்களுக்குள் நுழைந்துபோயின.செய்தி வாசிக்கின்றபோது காட்டு மரங்களில் ஒட்டியிருக்கும் சில் வண்டின் ஓசை ஒலிவாங்கிக்குள் நுழைந்து நேயர்களின் காதுகளை அடைந்தன.சில வேளை நேரடி ஒலிபரப்புக்களின் போது விச யந்துக்கள் எமது ஆசனத்தின் கீழோ அல்லது கலையக சுவர்களிலோ ஊர்ந்துகொண்டிருந்தன.பல வேளைகளில் குண்டு நம் கூரைகளில் விழுந்தன.இதையும் தாண்டி தன் இனத்துக்காக ஓயாத குரலாக இருந்த ஒலிபரப்பாளர்களுக்கு தலைவணங்காமல் இருக்கமுடியாது. இன்றைய ஒலிபரப்பாளர்களுக்கு மிக பொறுப்புணர்வுடன் கூடிய சமுக கடமையுண்டு.இன்று எமது கல்வி பண்பாடு வீழ்ச்சி அடைந்து கிடக்கின்றது.இதற்கு ஊடகத்துறையால் எவ்வாறு வழி நடத்தல் செய்ய முடியும் என சிந்திக்கவேண்டும்.அர்த்தமற்ற வார்த்தைகளையும் அரட்டைகளையும் பல தரப்பட்ட மனிதர்கள் செவிமடுக்கும் ஊடகங்களில் அறிவிப்புச் செய்வது பற்றி பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.இன்றைக்கு ஒலிச்சித்திரம் இசையும் கதையும் நாட்டார் கலைகள் போன்ற விடயங்கள் வானொலிகளில் அருகிவருகின்றது.இன்றைக்கும் பிற நாட்டாராலும் இலங்கை தமிழ் ஒலிபரப்புக்கள் விரும்பி கேட்படுவதற்கு காரணம் தமிழை அழயாக உச்சரிக்கின்ற ஒரே காரணத்துக்காக என்பதை இளைய ஒலிபரப்பாளர்கள் நெஞ்சத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்தார். ஒலி பண்பலையின் அறிவிப்பாளகளை தெரிவு செய்யும் நிகழ்வில்  தமிழ் சூரியன் வானொலியின் சிரேஸ்ட ஊடவியலாளரும்  செய்தி ஆசிரியர்களில் ஒருவருமான  எம்.ஜி.கிருஸ்ணகுமார் முன்னாள் கிளிநொச்சி வலய பிரதி கல்வி பணிப்பாளர் செல்வராஜா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் தர்மராஜா ஊடவியலாளர்கள் கவாஸ் ரிஸி தர்சன் விதுசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் முதலாம் இடத்தை கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல மாணவனும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவனுமான ராம்கி இரண்டாம் இடத்தை தர்சிகன் மூன்றாம் இடத்தை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர் சங்கீத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.13401049_1077002515708595_1731087572_n 13444086_1077002502375263_1254540951_n 13444325_1077002509041929_1638760413_n

Facebook Comments