மலேசியாவில் முதன் முறையாக மாவட்ட ஆணையாளர்களுக்கான பயிற்சி நெறி

இலங்கையை சேர்ந்த சாரண மாவட்ட ஆணையாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மற்றும் நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 15-06-2016 முதல் 20-06-2016 வரை உலக சாரணர் சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை சாரணிய சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இச்செயலமர்வில் இலங்கை சாரணர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த 29 மாவட்ட ஆணையாளர்களும் 07 உதவி மாவட்ட ஆணையாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.
அந்த வகையில் வடமாகாணத்தில் இருந்து மாவட்ட ஆணையாளரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அதிபரும் ஆகிய திரு.கி.விக்கினராஜா அவர்களும் உதவி மாவட்ட ஆணையாளர்களாகிய திரு.ந.மதுராகன் கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரும் மற்றும் திரு.க.துற்ஜெயந்தன் கிளிநொச்சி முக்கொம்பன் அ.த.க ஆசிரியரும் பங்குபற்றுகின்றார்கள். சென்ற வாரம் இவர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தேனீர் உபசாரம் வழங்கி கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.விக்கினராஜா (1)

. ந.மதுராகரன்க.துற்ஜெயந்தன்

Facebook Comments