கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு தலா 50000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் ஆரம்பாகவுள்ளது.

அண்மையில் சாலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிடங்கு விபத்துச் சம்பவத்தில் சேதமடைந்த 192 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

மூன்று மாத காலத்திற்கு இந்தக்கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது
வீடுகளை நிர்மானிப்பதற்கும் புனரமைப்பதற்கும் மூன்று மாதங்களை விட அதிகளவு காலத்தை படையினர் எடுத்துக்கொண்டால் அந்தக் காலத்திற்கும் இந்தக் கொடுப்பனவு செலுத்தப்பட உள்ளது.

வெடி விபத்துச் சம்பவத்தில் சேதமடைந்த 585 வீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முழுமையாக சேதமடைந்த 192 வீடுகளைச் சேர்ந்தவர்களக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேதமடைந்த பல வீடுகள் ஏற்கனவே புனரமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றன

Facebook Comments