யாழ்ப்பாணம் இணுவில் சிங்கத்தின் கலட்டி பகுதியில் இருந்த வீட்டுக்குள் திங்கட்கிழமை (13) இரவு நுழைந்து திருட முற்பட்ட திருடனை அவனது அலைபேசி காட்டிக் கொடுத்துள்ளது. அதனையடுத்து, குறித்த சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக தனது அலைபேசியில் இருந்த விளக்கின் ஊடாக (லைட்) வீட்டிலிருந்த பொருட்களை பார்த்துள்ளார். திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தால் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட கையில் வைத்திருந்த அலைபேசியை தவறவிட்ட திருடன் தப்பி ஓடியுள்ளான். அலைபேசியை மீட்ட வீட்டு உரிமையாளர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அதனை ஒப்படைத்துள்ளனர். அதனையடுத்து, அலைபேசியை சோதனை செய்த பொலிஸார், கந்தரோடை விகாரையடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
Facebook Comments