கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த போதும், அந்த வழக்குகளுக்கு சமுகமளிக்காமல் இருந்த 18 நபர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் நேற்று திங்கட்கிழமை (13) திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், அனைவரையும் இன்று கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

Facebook Comments