தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மலசல கூடத்தினை கண்டுபிடித்து உலகளாவிய ரீதியில் தமிழருக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி ஜாக்சன்அவர்களது வாழ்க்கை பாதை பற்றி எமது கிளிநொச்சி மீடியா செய்தியாளர்  முக நூல் வாயிலாக வினாவிய போது
விஞ்ஞானி ஜான்சன் அவர்கள் 1985ம் ஆண்டு கிளி நொச்சி விவேகானந்தநகர் பகுதியில் பிறந்து சுமார் பதினொரு வருடங்கள் கிளிநொச்சியில் வசித்த அவர் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றார் அங்கு சிறிது காலம் வசித்து விட்ட பின்னரே வவுனியா ஓமந்தையில் குடியேறினார்.

மின்சாரம், எரிபொருள், ஆளனி இன்றி செயற்படும் வகையில் புதிய நவீன முறையினை பயன்படுத்தி தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளதாகவும் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் விவசாயத்தில் ஒரு புரட்சியினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது அத்துடன் விவசாயிகளுக்கு ஒரு உந்து சக்தியாக எதிர்காலத்தில் இருக்கும் என்றும் இக்கண்டுபிடிப்பாளர் என்.என். ஜக்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் நான் கிளிநொச்சி மண்ணுக்கே உரித்தானவன் எனவும் கிளி நொச்சியில் பிறந்தேன் என குறிப்பிடுவது தனக்கு பெருமையாக உள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தனது மாற்றுத்திறனாளிகளுக்கான மலசல கூடத்தினை புதிய வடிவமைப்பில் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையினை வழங்கியிருந்ததுடன் தனது கண்டுபிடிப்புக்களை இலங்கையில் இருக்கும் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்று பத்திரிகைகளில் தொவித்ததையடுத்தே இன்றைய புதிய கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையிலிருக்கும் நிறுவனமான (Eastern Eagle Property Developer (pvt) Ltd Srilanka) பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வவுனியா இளைஞன் என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments