சாந்தபுரம் மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்திற்கொண்டு சுப்பிரமணியம் கதிர்காமநாதனினால் நேற்று முன்தினம் (2016.06.13) புதிய பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அரச அதிபர், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கதிர்காமநாதன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஆற்றி வரும் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிராம அலுவலர்கள், பல முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments