வடக்கு மாகாண ஆளுநரான றெஜினோல்ட்குரேயின் வலதுகரமாக செயற்பட்டு வந்த முரளி என அழைக்கப்படும் சிவராசா சிவகுலன் என்பவன் சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டது தொடர்பில்
கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜெஜினோல்ட்கூரே நியமிக்கப்பட்ட பின்னர் ஆளுநருக்கான ஆளணியில் சிவகுலனும் உள்வாங்கப்பட்டிருந்தான். இவன் ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநருக்கு அடுத்த அதிகாரம் மிக்கவனாக காணப்பட்டதாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றுவந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவன் முரளி என்ற பெயரில் ஆளுநர் அலுவலகத்தில் செயற்பட்டு வந்ததுடன் இவனைத் தேடி ஏராளமான யுவதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுநர் அலுவலகத்திற்க படையெடுத்துள்ளனர். வேலைவாய்ப்பு, நிதிஉதவி போன்றவற்றை ஆளுநர் இவனுக்கு ஊடாக செயற்படுத்தி வந்ததாக இவனிடம் சென்று வந்த சில முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இவன் யாழ்ப்பாணத்தில் ஹத்துருசிங்க இராணுவத்தளபதியாக இருந்த போது அவருடன் நெருங்கிச் செயற்பட்டவன் என்பதும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த சேர்ந்த சர்வா மற்றும் வடமராட்சியைச் சேர்ந்த அகிலதாஸ் போன்றவர்களுக்கு ஆதரவாகத் தொழிற்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவதற்கு அந் நேரம் வந்திருந்த ஜெறிலோட்கூரே இவனது வழிநடத்தலிலேயே தொழிற்பட்டதாகத் தெரியவருகின்றது. மகிந்த அரசாங்கத்தின் மிக முக்கிய விசுவாசியாக காணப்பட்ட இவன் ஈ.பி.டி.பி முக்கியஸ்தரும் வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான தவராசாவுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்துள்ளான.

இவன் ஆளுநராக றெஜிலோட்கூரே நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவருகின்றது. இதே வேளை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரின் ஆளணிக்காக ஆளுநரால் அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கல்வித்தகுதி இல்லாதவர்களும் காவாலிகளுமாகவே காணப்படுவதாகவும் ஆளுநர் அலுவலகத்துக்குச் சென்று வந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை நல்லாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்படட தற்போதய வடக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் மிகவும் சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளதாக பலதரப்பட்டவர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments