கிளி நொச்சி மீடியாவின் ஊடக அனுசரணையுடன் மாதம் தோறும்  பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக்கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும்  காவேரி கலாமன்றமும்  இணைந்து நடாத்தும் மாதாந்த முழு நிலவுக்  கலைவிழாவின்  நிலவின் முற்றம் பாகம்  01 காணொளி தொகுப்பு
21.04.2016 அன்று பண்டிதர் பரந்தாமன் கவின் கலைக்க்கலூரியின் துணை நிறுவுனர் திரு.சி.ஜீவநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக காவேரி கலாமன்றத்தின் இயக்குனர் வணபிதா T.S ஜோசுவா அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கந்தையா சிதம்பரநாதன் (ஓய்வு பெற்ற மருத்துவர்), திருமதி சிதம்பரநாதன் தர்மபூபதி {ஓய்வு நிலை விரிவுரையாளர்} திரு.ச.மோகனபவன் (திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலகம்) அத்துடன் திரு கு.றஜீபன் (கலாச்சார உத்தியோகத்தர் கரைச்சி) மற்றும் சமூக ஆர்வலர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த முறை நடைபெற்ற முழு நிலவுக்   கலைவிழாவின் நிலவின் முற்றம் பாகம்  01  தொகுப்பை இங்கு காணலாம்

Facebook Comments