1. கிளிநொச்சியில்போ தை அற்ற நாட்டை  உருவாக்குவோம் எனும்  தொனிப்பொருளில்  விழிப்புணர்வு  செயற்திட்டம்  ஒன்று  நடை பெற்றது

இன்று  காலை  பத்து  மணியளவில்  கரச்சி  பிரதேச  செயலக  மாநாட்டு  மண்டபத்தில்   கிளிநொச்சி  மாவட்ட  சமுதாய  சீர்திருத்த  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  நடை  பெற்றது
இவ்  விழிப்புணர்வு  செயற்ப்பாட்டு   நிகழ்வை   கரச்சி  பிரதேச செயலர்  தலைமை  ஏற்று நடத்தி  இருந்தார்  இவ்  விழிப்புணர்வு    செயற்  திட்டமானது  சமுதாய  சீர்திருத்த  கட்டளைக்கு  உட்பட்டவர்களுக்காகவே   ஒழுங்கு  படுத்தப்பட்டதாக   ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்
இவ்   நிகழ்வில்  பிரதம  விருந்தினராக   கிளிநொச்சி  நீதவான்  நீதிமன்றின்  நீதிபதி   எஸ் . ஆனந்தராஜா  கலந்து கொண்டார்  அத்தோடு   வளவாளர்களாக   சிறுவர் நன்னடத்தை  உத்தியோகத்தர் , உளவளத்துணை  உத்தியோகத்தர் ,சட்ட உதவி ஆணைக்குழு  உத்தியோகத்தர்  ஆகியோர்  கலந்து  கொண்டனர்  அத்தோடு   சமுதாய  சீர்திருத்த  கட்டளைக்கு  உட்பட்டவர்கள்,கிராம சேவையாளர்கள் ,கிளிநொச்சி  மாவட்ட  சமுதாய  சீர்திருத்த  திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்  என  பலரும்  கலந்து  கொண்டனர்
Facebook Comments