ஊடகவியலாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய ஊடகவியலாளருக்கு ஏதிராக பொலிஸில் முறைப்பாடு
கிளிநொச்சியில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கிளிநொச்சியில் பதினைந்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவத்துடன்  சம்பந்தப்பட்டவர் எனும் சந்தேகத்தின் பெயரில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில்
குறித்த சம்பவத்துடன் கிளிநொச்சியில் இருந்து செயற்படுகின்ற சுயாதீன் ஊடகவியலாளர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவரின் பெயர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டு சொன்னதாகவும் எனவே குறித்த சுயாதீன ஊடகவியலாளாரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவம் கிளிநொச்சியை சேர்ந்த பிரிதொரு ஊடகவியலாளர் சமூகத்தில் வதந்தியை பரப்பியுள்ளார். அத்தோடு பலருக்கு தொலைபேசி மூலமும் குறித்த பொய்யான செய்தியை தெரியப்படுத்தியுமுள்ளார்.  குறித்த சுயாதீன் ஊடகவியலாளர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஊடகப்பரப்பிலும், சமூகத்தில் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலை பரப்பி வருகின்றார்.
இது தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளரை சந்தித்து விடயத்தை தெரியப்படுத்திய போது குறித்த வழக்கில் அவரது பெயர் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே தனது முறைப்பாட்டை பதிவு செய்து நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுயாதீன ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
Facebook Comments