சங்குபிட்டி   பலத்திற்கு  அருகில் இன்று  மாலை  மூன்று  மணியளவில்  இடம்பெற்ற   விபத்தில்  பொலிஸ் உத்தியோகத்தர்  பலி

 இன்று  மாலை  மூன்று  மணியளவில்   சங்குபிட்டி   பலத்திற்கு  அருகில்  யாழ்ப்பாணம்   நோக்கி  பயணித்துக்  கொண்டிருந்த  மோட்டர்  சைக்கிள்  ஒன்றும்  யாழிலிருந்து  பூநகரி  நோக்கி  வந்து  கொண்டிருந்த  டிப்பர்  வாகனமும்  எதிர்  எதிரே   மோதுண்டதில்  மோட்டார்  சைக்கிளில்  சென்று கொண்டிருந்த   பொலிஸ்   உத்தியோகத்தர்    பலியாகி  உள்ளார்
குறித்த   விபத்தில்  பலியானவர்   யாழ்ப்பாணம்  சுன்னாக  பொலிஸ்  நிலையத்தை  சேர்ந்த 48 வயதான  பொலிஸ்  கான்ஸ்டபிள்  யோகநாதன்  என்பவரே  உயிரிழந்தவர்  என   அங்கிருந்து  கிடைக்கும்  தகவல்கள்  தெரிவிக்கின்றன
     இவரது   சடலம்   கிளிநொச்சி  பொது  வைத்திய  சாலையில்   வைக்கப்  பட்டுள்ளது
குறித்த விபத்து  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  பூநகரி  போலீசார்  மேற்கொண்டு  வருகின்றனர்
Facebook Comments