ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை விசாரிக்குமாறு முதலமைச்சர் பணிப்புரை.
கிளிநொச்சி கரைச்சி பிரதே செயலக பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாக முறைகேடுகள்,சட்டவிரோத நடவடிக்கைகளை  விசாரணை செய்து அறிக்கை தருமாறு முதலமைச்சர் வடக்கு மாகாண மீன் பிடி,போக்குவரத்துறை,கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
15-06-2016 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் முதலமைச்சர்  உரிய நடவடிக்கை பணித்துள்ளதாக அவரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்
 ஆனந்தபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தன் சட்டவிரோத மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண முதலமைச்சரிடம் கிராம மக்கள் 104 பேர் ஒப்பம் இட்டு  அனுப்பிய கடித்திற்கு அமைவாகவே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த  கிராம அபிவிருத்திச் சங்கம் யாப்பின் படி பதவியிழந்து ஒரு வருடமாகியும் புதிய நிர்வாகத்தெரிவுகள் எவையும் இடம்பெறாது. தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகளில் கிராம அபிவிருத்திச் சங்கம் ஈடுப்பட்டு வருவதாகவும், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது மக்களின் கருத்துக்கள் பெறப்படாது கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாலர் ஆகியோரின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள்
வீதிகள் மற்று; பாலங்கள் போன்ற அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கின்ற போது முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதில்லை என்றும், கூட்டங்களை நடத்தி நிதி நிலைமைகளை மக்களுக்க வெளிப்படுத்து கிடையாது என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.அத்தோடு இது தொடர்பில் தாங்கள் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரி;ன் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடு;கப்படவி;ல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவேதான் தாங்கள் குறித்த விடயத்தை முதலமைச்சரின் கவனத்திற்குகொண்டு சென்றதாகவும் அவர் இதனை கவனத்தில் எடுத்துள்ளதாகவும் இதற்கான பதில் அவரின் பிரத்தியேக செயலாளரின் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆனந்தபுரம் கிழக்கு பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 received_261770927517393
Facebook Comments