கிளிநொச்சி  பொலிஸ்  நிலையம்  மற்றும்  கிளிநொச்சி மக்கள்  தொடர்பாடல்  பொலிஸ்  பிரிவின்   ஏற்ப்பாட்டில்   கிளிநொச்சி  இரத்தினபுரம்  பொதுநோக்கு  மண்டபத்தில்   நடமாடும்  சேவை  ஒன்று  இடம்பெற்றது

இன்று  காலை  ஒன்பது  மணிதொடக்கம்  ஒருமணிவரை  நடைபெற்ற  இவ்   நடமாடும்  சேவையில்  கண் பரிசோதனை ,கண்ணாடி  வழங்கல் , பிறப்பு   இறப்பு  பதிவு     வைத்திய  பரிசோதனை , அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள்  மற்றும் கிராம சேவையாளர்களின்  செயற்ப்பாடு ,பொலிஸ் முறைப்பாட்டு  பிரதி  வழங்கல் , பொலிஸ்   முறைப்பாடு  பதிவு செய்தல் , சாரதி  அனுமதிப்பத்திரம்  பெறுவதற்கான  வழிகாட்டல்  போன்ற  சேவைகள்  அப் பிரதேச  மக்களுக்கு  இலவசமாக  வழங்கப்பட்டது
இவ்  நடமாடும்  சேவையில்  குறித்த  பிரதேசத்தை   சேர்ந்த  பெருமளவிலான   மக்கள்  சென்று  தமது  தேவைகளை  பூர்த்தி  செய்து  கொண்டனர்  என்பதும்  குறிப்பிடத்த்தக்கது _MG_2356 _MG_2359 _MG_2361 _MG_2368 _MG_2372 _MG_2378 _MG_2397 _MG_2403 _MG_2406 _MG_2412 _MG_2418 _MG_2420
Facebook Comments