தனியார் போக்குவரத்துச்சேவைகள் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ள  நிலையில்  கிளிநொச்சியில் தனியார் பேரூந்து  எவையும்   சேவையில்  ஈடுபடுத்த  படாமையினால்   அரச  உத்தியோகத்தர்கள்  ,மாணவர்கள்  , மக்கள்  என பலரும்   .பாதிக்கப்பட்டுள்ளனர்  என  அங்கிருக்கும்  எமது செய்தியாளர்  தெரிவிக்கின்றார்

.

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தவிடயம், தொடர்பில் மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் குற்றம்சுமத்தப்பட்டள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல் தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்தள்ளது.13510832_1008019705942002_829518427656824867_n 13521976_1008019609275345_2585404299759341847_n 13557807_1008019562608683_566315496720216608_n

Facebook Comments