கிளிநொச்சி, கல்;லாறு – சுண்டிக்குளம் பிரதான வீதி, இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதென வீதி அபிவிருத்தி அதிகார சபைத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்;டத்தின் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு சுண்டிக்குளம் பிரதான வீதி எதுவித புனரமைப்பு பணிகளுமின்றி மிகமோசமாக சேதமடைந்து மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. பருவமழை காலங்களில் சாதாரண துவிச்சக்கர வண்டிகளில் கூட பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியை பிரதான வீதியாகக் கொண்டு வாழும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து தற்காலிகமாக இவ்வீதியை புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Facebook Comments