சுண்டிக்குளம்  காட்டுப்பகுதியில்  நான்கு  ஆர்பிஜி ரக  செல்கள்  மீட்ப்பு

சுண்டிக்குளம்  காட்டுப்பகுதியில்  விறகுவெட்டச்  சென்றவர்கள்  ஆர்பிஜி  ரக   செல்கள்   இருப்பதாக  தர்மபுரம்  பொலிசாருக்கு  வழங்கப்பட்ட  தகவலுக்கு  அமைய  பொலிசார்  இன்று  காலை  தேடுதல்  நடவடிக்கை  ஒன்றை  மேற்க் கொண்டிருந்தனர்
குறித்த  காட்டுப்  பகுதியில்  விடுதலைப்  புலிகளால்  பாவிக்கப்பட்ட  பதுங்கு  அரணுக்கு  அருகில்  நான்கு ஆர்பிஜி ரக  செல்கள்  இருப்பதனை  அவதானித்த  பொலிசார்  குறித்த  பகுதியில்  பொலிஸ்  பாதுகாப்பு  வழங்கி  உள்ளனர்
குறித்த ஆர்பிஜி ரக  செல்கள்  மீட்ப்பதற்க்கும்  செயலிழக்க  செய்வதற்கும்   கிளிநொச்சி  நீதவான்  நீதி மன்றின்  அனுமதி  தேவைப்படுவதால்   கிளிநொச்சி  நீதவானின்  அனுமதிக்காக  காத்திருப்பதாக  தர்மபுரம்  பொலிஸ்  வட்டார  தகவல்கள்  தெரிவிக்கின்றன13550966_496242280570630_2017614967_n 13552656_496242983903893_1545422990_n
Facebook Comments