வட்டக்கச்சி  இராமநாத புரத்தில் இன்று  காலை 10.30  மணியளவில்  பொலிஸார் தோண்டுதல் நடவடிக்கை   ஒன்றை  நடத்தி  இருந்தனர் .

விடுதலை புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியில் இந்ந தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு, மூன்று  வாரங்களிற்கு  முன்னர் இனம் தெரியாதவர்களினால் விடுதலை புலிகளின் பதுங்கு குழி உள்ள பகுதியின் வளாகத்தில் தோண்டுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டு செல்லப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பகுதியில் என்ன உள்ளது என்பதனை ஆராய்வதற்காகவே இந்த தோண்டுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், குறித்த தேடுதல் வேட்டையில் கிளிநொச்சி பொலிஸார், குற்றத்தடவியல் பொலிஸார் மற்றும் இராமநாதபுர பொலிஸார் இணைந்து   நடத்தி  இருந்த  போதிலும்  எதுவும்  மீட்க்கப்படாமையினால்   தோல்வியில்  முடிவடைந்துள்ளது

இதேவேளை, விடுதலை புலிகளின் பதுங்கு குழி வளாகத்தில் இரண்டு இடங்களில் சந்தேக நபரிகளினால் தோண்டப்பட்டு விட்டுச்செல்லப்பட்ட  இடங்களிலையே  இந்த  தோண்டுதல்  நடவடிக்கை  மேற்க்  கொள்ளப்பட்டது  என்பதும்  குறிப்பிடத்தக்கது

_MG_2714 _MG_2736

Facebook Comments