2006-2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரினால் பல்வேறு காலகட்டங்களில் நேரடி பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு பகுதிகளை சேர்ந்த கணவன்மார்களை இழந்த பெண்கள், ஆதரவற்ற நிலையில் தனித்துவிடப்பட்டவர்கள், உடல்வலு இழந்த முன்னாள் போராளிகள் என 09 குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும்  உறவுகள் ஒரு குழுவாக இணந்து கோழிவளர்ப்புக்கு உதவியுள்ளனர்.

ROAD என்ற தங்கள் குழுவினூடாக அவர்கள் தேவைப்படும்போது தொடர்ந்து உதவிகளை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக  குறிப்பிடுகின்றனர் .

இவர்களைப்போன்ற நல் இதயம் படைத்த எமது புலம்பெயர் உறவுகளை மனதார கிளிநொச்சி  மீடியா  நிர்வாகம்  சார்பாக  வாழ்த்து  கின்றோம் . அத்தோடு  இவ்வாறு பாதிக்கப்பட்ட  எமது  மக்களை  இனங்கண்டு  தொடர்ந்து  உதவிகளை  வழங்க  வேண்டும்  எனவும்  கேட்டுக்  கொள்கின்றோம் 

பயனடைந்த தாயக உறவுகள்
——————————————-
1.கிருட்டினன் தங்கம்மா- வயது 77

2.ஞானசேகரன் பத்மினி- வயது 48

3.விநாயகமூர்த்தி தையல்நாயகி-வயது 59

4.சீவரட்ணம் புனிதவதி-வயது 58

5.ஆழிவேல் சிவபாக்கியம்-வயது 39

6.வசந்தகுமார் விமலாதேவி-வயது48

7.கணகரட்ணம் விமலேஸ்வரன்-வயது 47

8.சுப்பிரமணியம் கந்தசாமி-வயது 62

9.சுப்பிரமணியம் நாகம்மா-வயது 84

13524402_1263716637002103_5525364475811853144_n

Facebook Comments