கடந்த 29 ஆம் திகதி கிளிநொச்சி மத்தியகல்லூரி முன்பாக அமைந்திருக்கும் பிரபல வியாபாரநிலைய வர்த்தகர் ஒருவர் மூன்று நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம்(30.06.2016) அம்மூவரில் ஒருவர் அவ்வர்த்தகரை நேரில் சந்தித்து மன்னிப்புக்கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அக்குறித்த நபர் ஒரு பிரபல கல்வி நிலைய நிர்வாக ஆசிரியர் எனவும் , அவர் போதையில் அவரின் சகாக்களுடன் வந்துதான் அவ்வர்த்தகரை தாக்கியுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. தாக்கியதுக்கான உண்மைக்காரணத்தில் இன்னும் குழப்பநிலையே நிலவி வருகின்றது. இப்படி ஆசிரியர்களே போதையில் உலாவுவது கிளிநொச்சி கல்விச்சமூகத்தின் கவலைக்கிட நிலைமையை விளக்கியுள்ளது

Facebook Comments