விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்  துறைப்  பொறுப்பாளர்  தமிழ்ச்செல்வன்  அவர்களின்  முன்னாள் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் மாஸ்டரை அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக செயலாளரான தயா மாஸ்டரின் வழக்குதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைகள் கிடைக்காமையினால் இந்த வழக்கானது டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments