இலங்கை கிரிகெட் கட்டுப்பாட்டு சங்கம் நடாத்தும் பிரிவு 3 போட்டியில் இறுதிச்சுற்றில் மத்திய தீரர் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. முதலில் நாணயச்சுழற்சில் தெரிவாகிய இந்து இளைஞர் அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் மத்திய தீரர் அணியால் 63 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது.துடுப்பாட்டத்தில் சுவிதரன் 16,ஜெனுசன் 14 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் அனுக் ஷன் 6, தர்ஷன்… 3 இலக்குகளை வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் அணியினர் 9 இலக்குகளை இழந்து 21.3 ஓவர்களில் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் பிரதீசன் 18 ஓட்டங்களையும், அனுக்ஷன் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஜித் 7, லகிதரன் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக அனுக்சன் தெரிவானார்,தொடராட்ட நாயகனாக அஜித் தெரிவாகினார்.
இங்கே இந்து இளைஞர் அணியினர் தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது 1 2 3 4

Facebook Comments