யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து சுமார் 9 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமை யாழ் நீதிமன்றத்துக்கு நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன் போது அவர் தனது மோட்டார் சைக்கிளை நீதிமன்றுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

நீதிமன்றுள் சென்று திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. இதனையடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை தலைக்கவசம் அணிந்த நபரொருவர் களவாடி எடுத்து செல்கின்ற வீடியோ காட்சியொன்றை அருகில் இருந்த வீடொன்றின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தமை தெரிந்துகொண்டனர்.

இதனையடுத்து அதனை கைப்பற்றிய பொலிஸார் அவற்றை அடிப்படையாக கொண்டு விசாரனைகளை முன்னெடுத்துவருகின்றனர்.jaffna01

Facebook Comments